மத்திய வங்கி முறிகள் மோசடியின் முழுமையான அறிக்கை விரைவில் வௌிவரும்: ரோஹன லக்ஸ்மன் பியதாச

மத்திய வங்கி முறிகள் மோசடியின் முழுமையான அறிக்கை விரைவில் வௌிவரும்: ரோஹன லக்ஸ்மன் பியதாச

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2018 | 7:28 pm

Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான முழுமையான அறிக்கையை இன்னும் சில தினங்களில் வௌியிடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டார்.

கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

இன்னும் சில நாட்களில் தமிழ் மற்றும் சிங்கள பிரதிகள் வௌியிடப்படும் எனவும் அதன் பின்னர் சில விடயங்களைத் தம்மால் அம்பலப்படுத்த முடியும் எனவும் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

நேற்று (07) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் கட்சியின் அரசியல் செயற்குழு உறுப்பினர்களால் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்