காட்டுயானைகளின் நடமாட்டம் குறித்து சாரதிகளுக்கு குறுந்தகவல்

காட்டுயானைகளின் நடமாட்டம் குறித்து சாரதிகளுக்கு குறுந்தகவல்

காட்டுயானைகளின் நடமாட்டம் குறித்து சாரதிகளுக்கு குறுந்தகவல்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2018 | 12:50 pm

Colombo (News 1st) ரயில் மார்க்கத்திற்கு அருகில் காட்டுயானைகள் நடமாடுவது குறித்து குறுந்தகவல்கள் மூலம் சாரதிகளுக்கு அறிவிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

நாளை மறுதினம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டுயானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பதைத் தவிர்ப்பதற்காக, பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக 24 மணித்தியாலங்கள் இயங்கும் மத்திய நிலையமொன்று அமைக்கப்படவுள்ளதாக பரிந்துரை குழுவின் உறுப்பினர் பொறியியலாளர் இரோஷ் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனைத்தவிர, குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் இரோஷ் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்