இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுநராக ஸ்டீவ் ரிக்ஸன் நியமனம்

இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுநராக ஸ்டீவ் ரிக்ஸன் நியமனம்

இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுநராக ஸ்டீவ் ரிக்ஸன் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2018 | 3:24 pm

Colombo (News 1st) இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுநராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ரிக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் வரை அவர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக செயற்படவுள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை அணியுடன் உத்தியோகப்பூர்வமாக இணையவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றினூடாக இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் ஸ்டீவ் ரிக்ஸன் பாகிஸ்தான் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

64 வயதான ஸ்டீவ் ரிக்ஸன் 16 டெஸ்ட் போட்டிகளிலும் 6 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்