இராணுவத்தினர் வசமுள்ள 13 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது

இராணுவத்தினர் வசமுள்ள 13 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2018 | 3:33 pm

Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள 13.25 ஏக்கர் காணி நாளை மறுதினம் (10) விடுவிக்கப்படவுள்ளது.

 

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த காணிகளை கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

காணிகளை அதன் உரிமையாளர்களிடமே கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு, கிழக்கில் இதுவரையில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர தனியாருக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த காணிகளையும் மீண்டும் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் மேலும் குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்