அவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்லி

அவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்லி

அவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்லி

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2018 | 9:35 pm

அவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரராக விராட் கோஹ்லி பதிவானார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்றைய மூன்றாம் நாளில் 9 ஓட்டங்களைப் பெற்ற போது அவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரராக விராட் கோஹ்லி பதிவானார்.

அவர் 18 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்தார்.

இதற்கு முன்னர் வி.வி.எஸ் லக்ஷ்மன் 19 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்திருந்தார்.

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களையும் இந்தியா 250 ஓட்டங்களையும் பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்