வவுணதீவு கொலை: தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்

வவுணதீவு கொலை: தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2018 | 8:48 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வவுணதீவில் நடைபெற்ற கொலைச்சம்பவம் தொடர்பாக தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

கிழக்கு பிராந்திய உதவி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சுமார் 100 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்