19 ஆவது அரசியலமைப்பு வரைபின் போது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கருதுகின்றோம்: டிலான் பெரேரா

19 ஆவது அரசியலமைப்பு வரைபின் போது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கருதுகின்றோம்: டிலான் பெரேரா

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2018 | 4:02 pm

Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நியூஸ்லைன் விசேட தொகுப்பில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

என்னிடம் 78 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உண்மையான பிரதி உள்ளது. அதில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களின் வரையறை குறித்து தௌிவாகக் கூறப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பிற்கு செல்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அந்த பகுதி குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. 19 ஆவது அரசியலமைப்பு வரைபின் போது குழுக்கள் மட்டத்தில் சந்தேகத்திற்கிடமான விடயங்கள் இடம்பெற்றிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். இதன் காரணமாகத் தான் அவர்கள் இந்த விடயத்தை பின்கதவால் கொண்டு செல்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்