இரணைமடு குளத்தை உத்தியோகப்பூர்வமாக விவசாயிகளிடம் கையளித்தார் ஜனாதிபதி

இரணைமடு குளத்தை உத்தியோகப்பூர்வமாக விவசாயிகளிடம் கையளித்தார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2018 | 3:55 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – இரணைமடு குளத்தை விவசாயிகளிடம் உத்தியோகப்பூர்வமாகக் கையளித்து, வான் கதவை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இரணைமடு குளத்திற்கு வருகை தந்த ஐனாதிபதி இன்று முற்பகல் இரணைமடு குளத்தை விவசாயிகளிடம் கையளித்தார்.

இதனையடுத்து 14 வான்கதவுகளில் ஒரு வான்கதவை ஐனாதிபதி திறந்து வைத்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இரணைமடு குளம் வரலாற்றில் முதற்தடவையாக 36 அடியை எட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்