82 வருடங்கள் பழமைவாய்ந்த பந்துவீச்சு சாதனையை முறியடித்த யசிர் ஷா

82 வருடங்கள் பழமைவாய்ந்த பந்துவீச்சு சாதனையை முறியடித்த யசிர் ஷா

82 வருடங்கள் பழமைவாய்ந்த பந்துவீச்சு சாதனையை முறியடித்த யசிர் ஷா

எழுத்தாளர் Bella Dalima

06 Dec, 2018 | 9:43 pm

Colombo (News 1st) டெஸ்ட் அரங்கில் 82 வருடங்கள் பழமைவாய்ந்த பந்துவீச்சு சாதனை ஒன்றை பாகிஸ்தானின் யசிர் ஷா முறியடித்தார்.

நியூஸிலாந்திற்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவர் இந்த உலக சாதனையை நிகழ்த்தினார்.

அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 274 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 348 ஓட்டங்களையும் பெற்றது.

74 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது.

அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் 14 ஓட்டங்களுடனும் வில்லியம் சொமர்வில்லி 4 ஓட்டங்களுடனும் களமிறங்கினர்.

சொமர்வில்லியை LBW முறையில் வீழ்த்திய யசிர் ஷா குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களைக் கைப்பற்றிய வீரராக உலக சாதனை படைத்தார்.

யசிர் ஷா 33 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களை எட்டினார்.

82 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் கிளரி கிரிம்மட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களை கைப்பற்றி சாதித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்