புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 06-12-2018 | 6:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவிற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (04) பிற்பகல் தாக்கல்செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்வதற்கு இதுவரையில் திகதி குறிப்பிடப்படவில்லை. 02. ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் நேற்று (05) பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 03. பாராளுமன்றத்தில் நேற்று (05) சமர்ப்பிக்கவிருந்த பிரேரணையைப் பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்தது. 04. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு எடுத்த தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். 05. கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான இயலுமை ரணில் விக்ரமசிங்கவிற்கு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்துவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா அறிவித்துள்ளார். 02. பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள நியூ கெலடோனியா (New Caledonia) பகுதிக்கு அருகில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விளையாட்டுச் செய்திகள் 01. கென்யாவின் ஒலிம்பிக் சம்பியனான எலியுட் கிப்ஜோச் (Eliud Kipchoge) ஆண்டின் அதிசிறந்த மெய்வல்லுநர் வீரர் விருதையும் ஆண்டின் அதிசிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை கொலம்பியாவின் முப்பாய்ச்சல் வீராங்கனையான கேத்தரின் இபேர்குவனும் (Caterine Ibarguen) சுவீகரித்துள்ளனர். 02. இந்திய அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌதம் கம்பீர் (Gautam Gambhir) சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.