குறைபாடுகளைத் திருத்தி 19 ஆவது திருத்தத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புச் செய்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 06-12-2018 | 8:35 PM
Colombo (News 1st) 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கு தாம் அர்ப்பணிப்புச் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தங்களாக இந்நாட்டில் காணப்பட்ட ஜனநாயகம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் நற்பயனாக சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, ஜனநாயக நிறுவனங்களின் வியூகங்கள் பலப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்து, அரசியல் ரீதியில் சிக்கல் நிலை தோன்றியுள்ள விடயங்கள் குறித்த திருத்தங்களை பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு அமைய நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புச் செய்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.