அலங்கார மலர் வளர்ப்பில் அதிக வருமானம்

அலங்கார மலர் வளர்ப்பு மற்றும் தாவர ஏற்றுமதியில் 2017-இல் 16 மில்லியன் டொலர்கள் வருமானம்

by Staff Writer 06-12-2018 | 5:11 PM
Colombo (News 1st) அலங்கார மலர் வளர்ப்பு மற்றும் தாவர கைத்தொழில் என்பன அதிக வருமானம் தரக்கூடிய கைத்தொழில்கள் என விவசாய அமைச்சு இனங்கண்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய பொருளாதாரத்தில் மகளிர் தொழிலாளர்களின் பங்களிப்பையும் பெற சமூக பொருளாதார அபிவிருத்தித்துறையில் இந்த தொழிற்துறையையும் இணைத்துக்கொள்ள முடியும் என ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அலங்கார மலர் வளர்ப்பு மற்றும் தாவர ஏற்றுமதியில் 2017-இல் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.