அமெரிக்காவிற்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை

by Chandrasekaram Chandravadani 06-12-2018 | 7:41 AM
பனிப்போர் கால ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால், தடை செய்யப்பட்டுள்ள ஏவுகணை அபிவிருத்தியில் தமது நாடு ஈடுபடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இடைநிலை வீச்சு அணுவாயுத ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ரஷ்யா மீது நேட்டோ முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து, விளாடிமிர் புட்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார். 1987ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் குறுகிய மற்றும் இடைநிலைத் தாக்குதல் ஏவுகணைகள் தடைசெய்யப்பட்டன. அதேநேரம், இடைநிலை வீச்சு அணுவாயுத ஒப்பந்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களை, பல நாடுகள் அபிவிருத்தி செய்துவருவதாக புட்டின் குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை, ரஷ்யாவின் நடவடிக்கைகளால் குறித்த ஒப்பந்தத்திலிந்து அமெரிக்கா விலகும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.