ராஜமவுலி படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ்

ராஜமவுலி படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ்

ராஜமவுலி படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ்

எழுத்தாளர் Bella Dalima

06 Dec, 2018 | 4:53 pm

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR) படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது RRR என்று அழைக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19- ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இராமாயணக் காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் வௌியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேஸிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்கிறார்கள்.
நயன்தாரா ஏற்கனவே `ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ என்ற படத்தில் சீதையாக நடித்திருக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்