வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதாக விஜய் மல்லையா அறிவிப்பு

வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதாக விஜய் மல்லையா அறிவிப்பு

வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதாக விஜய் மல்லையா அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Dec, 2018 | 4:58 pm

வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்துவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா அறிவித்துள்ளார்.

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் 9000 கோடி இந்திய ரூபா கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார்.

அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்யவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது 13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்