ஓமந்தை பொலிஸ் நிலைய முன்றலில் கஞ்சா வர்த்தகம்: ஐவர் கைது

ஓமந்தை பொலிஸ் நிலைய முன்றலில் கஞ்சா வர்த்தகம்: ஐவர் கைது

ஓமந்தை பொலிஸ் நிலைய முன்றலில் கஞ்சா வர்த்தகம்: ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2018 | 11:24 am

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வவுனியா வீதியின் ஓமந்தை பொலிஸ் நிலைய முன்றலில் கேரள கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோகிராம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பரந்தன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 18, 29, 30, 36 மற்றும் 45 வயதுகளையுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டிருந்த ஒருவர் ராகம, பேரலந்த வீதிப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 109 கிராம் 94 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், ராகமையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்