ஐக்கிய தேசியக் கட்சி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான இணக்கப்பாடு என்ன: உதய கம்மன்பில கேள்வி

ஐக்கிய தேசியக் கட்சி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான இணக்கப்பாடு என்ன: உதய கம்மன்பில கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

05 Dec, 2018 | 9:48 pm

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது ட்விட்டர் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளது.

ட்விட்டரில் அதிகளவில் பிரபல்யமடைந்த பதிவொன்றுக்கு பதில் வழங்கும் வகையில், கூட்டமைப்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய போதிலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஒரு மாத காலமாக கூறி வந்தது. திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கு தேவையான 113-க்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேன்கூட்டை உடைப்பது கையை சுவைப்பதற்காக அல்லவென்பதை நாம் அறிவோம். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு தொடர்பில் உடனடியாக நாட்டிற்கு வௌிப்படுத்த வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்