உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் பாதுகாப்பின் கீழ் 350-க்கும் அதிக இலங்கை பணிப்பெண்கள்

உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் பாதுகாப்பின் கீழ் 350-க்கும் அதிக இலங்கை பணிப்பெண்கள்

உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் பாதுகாப்பின் கீழ் 350-க்கும் அதிக இலங்கை பணிப்பெண்கள்

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2018 | 3:51 pm

Colombo (News 1st) வௌிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்ற 350-க்கும் அதிக இலங்கை பணிப்பெண்கள் வெவ்வேறு காரணங்களால் அந்தந்த நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் பாதுகாப்பின் கீழ் உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

இதில் அதிகளவானவர்கள் சவுதி மற்றும் யேமனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் பாதுகாப்பின் கீழ் உள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

ஊதியம் வழங்கப்படாமை, பணியிடங்களில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறித்த பிரிவினர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வௌிநாடுகளின் தொழில் அமைச்சுக்களிடம் கலந்துரையாடி பணிப்பெண்களாக சென்றவர்களை துரிமாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டது.

நாட்டிற்கு திரும்பி வர இணங்காத பிரிவினர் பிறிதொரு துறையில் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்