அலி ரொஷான் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

அலி ரொஷான் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

அலி ரொஷான் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2018 | 1:40 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக 4 யானைகளை வைத்திருந்தமை மற்றும் யானைகளைக் கடத்தியமை தொடர்பில் அலி ரொஷான் என்றழைக்கப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேருக்கு எதிரான வழக்கை, 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதற்கு விசேட மேல்நீதிமன்றம் இன்று (05) தீர்மானித்தது.

சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன் மற்றும் சம்பா ஜானகி ராஜரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் அலி ரொஷான் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் 24 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்