ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாடு இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாடு இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாடு இன்று

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2018 | 6:52 am

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாடு இன்று (04) நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

நாடு தொடர்பிலான தீர்மானம் எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட விடங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்