மலையகம் முழுவதும் முழுமையான பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு

மலையகம் முழுவதும் முழுமையான பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு

மலையகம் முழுவதும் முழுமையான பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2018 | 7:40 am

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, இன்று (04) மலையகம் முழுவதும் முழுமையான பகிஷ்கரிப்பிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அதன் பணிகளை முடக்கும் வகையில் இன்று முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1,000 ரூபாவிற்கும் குறைவான சம்பளம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்