பொலன்னறுவையில் எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

பொலன்னறுவையில் எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

பொலன்னறுவையில் எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2018 | 7:45 am

Colombo (News 1st) பொலன்னறுவை பகுதியில், எலிக் காய்ச்சலினால் கடந்த 3 வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள், எலிக் காய்ச்சலினால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள், உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலன்னறுவை சுகாதார சே​வை பணிப்பாளர், டொக்டர் சரத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் சரத் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்