திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Dec, 2018 | 5:56 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிப்பதை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

02. அமைச்சரவையை இடைநிறுத்தியதாக அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவுடன் தம்மால் இணங்கமுடியாது என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

03. உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுக்களை மீளப்பெறுமாறு கோரி, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

04. அரசியலமைப்புக்கு இணங்க செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

05. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, எதிர்வரும் 7ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. காலநிலை மாற்றம் மனித குலத்திற்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக இயற்கையியலாளர் டேவிட் அட்டென்பொரோ (David Attenborough)தெரிவித்துள்ளார்.

02. யேமனில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. விமானமொன்றின் மூலம் அங்கிருந்து வௌியேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்