சரியான கொள்கையின்படியே அனைத்தும் முன்னெடுக்கப்பட்டன: சபாநாயகர்

சரியான கொள்கையின்படியே அனைத்தும் முன்னெடுக்கப்பட்டன: சபாநாயகர்

சரியான கொள்கையின்படியே அனைத்தும் முன்னெடுக்கப்பட்டன: சபாநாயகர்

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2018 | 7:05 pm

Colombo (News 1st) சர்வதேச பாராளுமன்ற சங்கம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தில் காணப்படும் நிலையியற்கட்டளைகளுக்கு ஏற்பவே இதுவரை பாராளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபரையோ அல்லது குழுவையோ பலப்படுத்துவதற்காகவோ அல்லது பலவீனப்படுத்துவதற்காகவோ தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

சரியான கொள்கையின்படியே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளை எவராவது ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்வதில்லை என்றால், தன்னையும் பாராளுமன்றத்தையும் அவமதிக்காமல் சட்டப்பூர்வமாக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்து தன்னை நீக்க முடியும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளை வன்முறைகளின்றி முன்னெடுப்பதற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்