ஐதேக – மஹிந்த ராஜபக்ஸ தரப்பினரிடையே இரகசியப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக அனுரகுமார தெரிவிப்பு

ஐதேக – மஹிந்த ராஜபக்ஸ தரப்பினரிடையே இரகசியப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக அனுரகுமார தெரிவிப்பு

ஐதேக – மஹிந்த ராஜபக்ஸ தரப்பினரிடையே இரகசியப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக அனுரகுமார தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2018 | 6:23 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஸவின் குழுவொன்று இடைக்கிடையே இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த சூழ்ச்சியை மறைக்க இடமளிக்கக்கூடாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த அரச சூழ்ச்சியின் பங்காளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும் எனவும் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நேற்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்விடயங்களை வௌியிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்