அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேனவிற்கு மீண்டும் விளக்கமறியல்

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேனவிற்கு மீண்டும் விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2018 | 5:36 pm

Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்ப்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் சார்பில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு தொடர்பில் ஆட்சேபனைகள் காணப்படுமாயின், எதிர்வரும் 18 ஆம் திகதி அதனை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்