அம்பாறை விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை

அம்பாறை விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை

அம்பாறை விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2018 | 8:58 am

Colombo (News 1st) அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு உரமானியத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்திற்குத் தேவையான உர வகைகளை கொழும்பிலிருந்து எடுத்துவருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தடைப்பட்டிருந்த உரமானிய விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 1,25,000 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்