அம்பலாங்கொடயில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

அம்பலாங்கொடயில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

அம்பலாங்கொடயில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2018 | 1:39 pm

Colombo (Nws 1st) அம்பலாங்கொட பகுதியில் சட்டவிரோதமான துப்பாக்கிகள் மூன்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காலி உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 3 துப்பாக்கிகள், மோட்டார் சைக்கிள், வேன் மற்றும் கார் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

21 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்கள் இன்று (03) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்