ஜனாதிபதி தலைமையில் அவசர பாதுகாப்புக் கூட்டம்

பிரான்ஸில் ஜனாதிபதி தலைமையில் அவசர பாதுகாப்புக் கூட்டம்

by Chandrasekaram Chandravadani 02-12-2018 | 6:03 PM
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனினால் அவசர பாதுகாப்புக் கூட்டமொன்று இன்று (02) நடாத்தப்படவுள்ளது. தலைநகர் பாரிஸில் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், குறித்த வன்முறைப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படலாம் என அந்நாட்டு அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய எதிர்ப்புப் போராட்டங்களில் சிக்கி 23 பாதுகாப்புப் படையினர் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதேநேரம், 400க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஆர்ஜென்ரீனாவில் இடம்பெறும் G-20 மாநாட்டில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மெக்ரோன், அவசரமாக இன்று காலை நாடு திரும்பியதுடன், போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.