பொதுத் தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி - பிரதமர்

ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட பொதுத் தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி - பிரதமர்

by Staff Writer 02-12-2018 | 2:57 PM
Colombo (News1st) நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட பொதுத் தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் தொடர்பில் விளக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று விசேட உரையாற்றினார். பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு உள்ள சட்டபூர்வ அதிகாரம் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தௌிவுபடுத்தினார்.
இரண்டாவது குடியரசு யாப்பின் 70 (1) சரத்து நீக்கப்பட்டு 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 70 (1) சரத்திற்கு இணங்க நான்கரை வருடங்கள் கடக்கும் வரையில் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது எனவும் பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனை 3/2 பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்படும் பட்சத்திலேயே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் பெயரளவு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்ட நாடுகளில் கூட அவசர காலங்களில் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் உள்ளதாகவும் ஆனால், இலங்கையில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரமில்லை என்பது துரதிஷ்டவசமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை எமது பிரதான செய்திகளில் எதிர்பாருங்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆற்றிய முழுமையான உரை இன்றிரவு சிரச டிவியில் ஔிப்பரப்பாகும் 10 மணி பிரதான செய்திகளின் பின்னர் ஔிப்பரப்பாகும்.