தற்போதுள்ள அரசாங்கமே தொடர்ந்தும் செயற்படும் – எஸ்.பி. திசாநாயக்க

தற்போதுள்ள அரசாங்கமே தொடர்ந்தும் செயற்படும் – எஸ்.பி. திசாநாயக்க

தற்போதுள்ள அரசாங்கமே தொடர்ந்தும் செயற்படும் – எஸ்.பி. திசாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2018 | 1:18 pm

Colombo (News1st) தேர்தல் நடைபெறாவிட்டாலும், தற்போதுள்ள அரசாங்கமே தொடர்ந்தும் செயற்படும் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை கண்டி நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

7 ஆம் திகதி தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளோம். மக்கள் கோருகின்ற தேர்தலையே நாம் வலியுறுத்துகின்றோம். அரசாங்கத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் குழப்பங்கள் ஏற்பட்டதால், அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்கத் தீர்மானித்தோம். ஜனநாயக ரீதியிலேயே ஜனாதிபதி, நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார். நீதிமன்றத்தினால் ​தேர்தலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் பெரும்பாலான ஆசனங்களுடன் நாம் அரசாங்கத்தை அமைப்போம். பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றிணைந்துள்ளனர். நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாகவே இருவரும் ஒன்றிணைந்தனர்

என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்