ஜனாதிபதி – ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதி – ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதி – ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2018 | 12:18 pm

Colombo (News1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (02) சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற குழுவினரே, இன்றைய சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஜனாதிபதியுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்று கலந்தாலோசிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று இரவு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் பிரதமர் விளக்கமளிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்