கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2018 | 1:10 pm

Colombo (News1st) கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை (03) ஆரம்பமாகவுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை 6,56,641 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

அதேநேரம், பரீட்சைக்காக 4,661 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள், பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம், தேசிய அடையாளஅட்டை அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனுமொரு அடையாள ஆவணத்தை எடுத்துச்செல்வது கட்டாயமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை மத்திய நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டுசெல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு 5 வருட கால பரீட்சை தடை விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்