புத்தளத்தில் இறால் விலை குறைவு

புத்தளத்தில் இறால் விலை குறைவு

by Staff Writer 01-12-2018 | 1:22 PM
Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தில் இறால்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. இறால்களின் விலை குறைவடைந்தமை காரணமாக, தமது உற்பத்திச் செலவுகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக பண்ணையாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர். இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு தமக்கான நிர்ணயவிலை ஒன்றை வகுத்துத் தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.