மொனராகலையில் இனிப்புத் தோடம்பழச் செய்கை வலயம்

மொனராகலையில் இனிப்புத் தோடம்பழச் செய்கை வலயம்

மொனராகலையில் இனிப்புத் தோடம்பழச் செய்கை வலயம்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2018 | 7:38 am

Colombo (News 1st) இலங்கையில் மிகப்பெரிய இனிப்புத்தோடம்பழ செய்கை வலயம், எதிர்வரும் திங்கட்கிழமை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் பிபிலை பகுதியில் இந்தத் தோடம்பழ வலயம் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக 22,000 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பகுதி இனங்காணப்பட்டுள்ளது.

பிபிலை சுவீட் எனப்படும் இனிப்புத் தோடம்பழ மரக்கன்றுகள் இங்கு பயிரிடப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக 85,000 மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.

இந்த செயற்றிட்டத்தில் 1,50,000 கிலோகிராம் இனிப்புத் தோடம்பழத்தை உற்பத்தி செய்வது இதன் நோக்கமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்