by Staff Writer 01-12-2018 | 1:13 PM
Colombo (News 1st) பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2,891 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த தினங்களில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளின்படி, இந்தப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 1,783 பொலிஸ் கான்ஸ்டபள்கள் பொலிஸ் சார்ஜன்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சார்ஜன்களாகக் கடமையாற்றிய 553 பேர் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.