பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் 21 ஆம் திகதி இறுதித் தீர்மானம்

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் 21 ஆம் திகதி இறுதித் தீர்மானம்

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் 21 ஆம் திகதி இறுதித் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2018 | 5:07 pm

Colombo (News 1st) பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் விலை மீண்டும் குறைக்கப்பட்டமைக்கமைவாக பஸ் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பஸ் சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களையும் குறைப்பது தொடர்பிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது.

இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து பஸ் சங்கங்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.