9 பேரும் ஒன்று சேர்ந்து 9 அமைச்சுகளை வாங்க வேண்டும்: வடிவேல் சுரேஷ்

9 பேரும் ஒன்று சேர்ந்து 9 அமைச்சுகளை வாங்க வேண்டும்: வடிவேல் சுரேஷ்

9 பேரும் ஒன்று சேர்ந்து 9 அமைச்சுகளை வாங்க வேண்டும்: வடிவேல் சுரேஷ்

எழுத்தாளர் Bella Dalima

08 Nov, 2018 | 7:45 pm

Colombo (News 1st) ஆறுமுகன் தொண்டமான், இராதகிருஷ்ணன், திகாம்பரம், மனோ கணேசன், அரவிந்தகுமார், வேலுகுமார், திலகர் ஆகியோரும் தாமும் ஒன்றாக இணைந்து 9 அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டும் என வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், அமைச்சு அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வடிவேல் சுரேஷூம், தொண்டமானும் மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. நானும் அறுமுகன் தொண்டமானும் மாத்திரமல்ல இராதாகிருஷ்ணன் அவர்கள், திகாம்பரம் அவர்கள், மனோ கணேசன் அவர்கள், அரவிந்தகுமார், வேலுகுமார், திலகர் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். ஒன்பது பேரும் ஒன்று சேர்ந்து ஒன்பது அமைச்சுகளை வாங்க வேண்டும்

என வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.