சிறந்த விளையாட்டு நிகழ்ச்சி Inside Sports

சில்க் விருது வழங்கல் விழா: ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட்டின் Inside Sports சிறந்த விளையாட்டு நிகழ்ச்சியாகத் தெரிவு

by Staff Writer 30-11-2018 | 10:43 PM
சில்க் விருது வழங்கல் விழா: ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட்டின் Inside Sports சிறந்த விளையாட்டு நிகழ்ச்சியாகத் தெரிவு சில்க் விருது வழங்கல் விழாவில் வருடத்தின் சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருதை ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட்டின் "இன்சைட் ஸ்போர்ட்ஸ்" (Inside Sports) நிகழ்ச்சி சுவீகரித்துள்ளது. நான்காவது முறையாக நடத்தப்படும் சில்க் விருது வழங்கல் விழா பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. பல ஊடக நிறுவனங்கள் போட்டியில் கலந்துகொண்டதுடன், வருடத்திற்கான சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருதை ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட்டின் "இன்சைட் ஸ்போர்ட்ஸ்" நிகழ்ச்சி சுவீகரித்ததுடன், விருதை ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட்டின் முகாமையாளர் மஞ்சு தேனுவர பெற்றுக்கொண்டார். இதனிடையே, விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக MTV Channel தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட உதும்பரா திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.சமந்த்ராஜ் பெற்றுக்கொண்டார். நாட்டின் வீர, வீராங்கனைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.