ஐ.தே.மு பிரதமர் ஒருவரை முன்மொழிந்தால் ஆதரவளிப்போம்

ஐக்கிய தேசிய முன்னணி பிரதமர் ஒருவரை முன்மொழிந்தால் ஆதரவளிப்போம்: எம்.ஏ. சுமந்திரன்

by Staff Writer 30-11-2018 | 9:42 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணி பிரதமராக ஒருவரை முன்மொழிந்தால், அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடியவராக இருந்தால், அவரை பிரதமராக நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று (29) ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் எம்.ஏ. சுமந்திரன் தௌிவூட்டினார். இதன்போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்