அமைச்சர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது: பிரேரணை நிறைவேற்றம்

அமைச்சர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது: பிரேரணை நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2018 | 4:08 pm

அமைச்சர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது: பிரேரணை நிறைவேற்றம்

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்த செயலாளர்கள் அனுமதிக்கக்கூடாது என்ற பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை.

பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகியதுடன், ஆளும் தரப்பினர் இன்றும் சபைக்கு வருகை தரவில்லை.

பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முற்பகல் 10.30 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்