பிரதமரின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணை நிறைவேற்றம்

by Bella Dalima 29-11-2018 | 12:52 PM
Colombo (News 1st) பிரதமரின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எதிராக வாக்குகள் எவையும் அளிக்கப்படவில்லை. பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணையொன்று சபையில் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். அரச நிதியை பிரதமரின் செயலாளர் கையாள்வதை இடைநிறுத்துவதற்கான பிரேரணை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.