ரஷ்ய ஜனாதிபதியுடனான சந்திப்பு ரத்து செய்யப்படலாம்

ரஷ்ய ஜனாதிபதியுடனான சந்திப்பு ரத்து செய்யப்படலாம் - டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 28-11-2018 | 10:01 AM
ஜி - 20 மாநாட்டின்போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான திட்டமிடப்பட்ட சந்திப்பை தாம் ரத்து செய்யக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரைனுடனான கடற்பிராந்திய மோதல்களை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானத்தை தாம் எடுக்கவேண்டி ஏற்படலாம் என ட்ரம்ப் கூறியுள்ளார். குறித்த சந்திப்பு தேவையில்லாமலும் போகலாம், இந்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டை நான் விரும்பவில்லை, இவ்வாறான ஆக்கிரமிப்பாளர்கள் தமக்குத் தேவையில்லை எனவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை க்ரைமியாவிற்கு அருகில் வைத்து, யுக்ரைனின் படகுகள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா, அவற்றைப் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.