பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் எவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற முடியும்: ரவி கருணாநாயக்க கேள்வி

by Bella Dalima 28-11-2018 | 7:56 PM
Colombo (News 1st) பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் எவ்வாறு அமைச்சரவையைக் கூடி இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார். இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். முதலில் அமைச்சரவை ஒன்று இருக்க முடியாது. பெரும்பான்மை இல்லாத, நம்பிக்கை இல்லாத அரசாங்கமொன்று எவ்வாறு அமைச்சரவையைக் கூட முடியும்? பாராளுமன்றத்திற்கு வராத போலி அரசாங்கத்தினால் இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற முடியுமா? கேலிக்குரிய விடயங்களை செய்யாமல் தயவுசெய்து பாராளுமன்றத்தில் பெருன்பான்மையை காண்பியுங்கள்.