ஹன்சார்ட் அறிக்கையில் பொய்த்தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உதய கம்மன்பில கடிதம்

ஹன்சார்ட் அறிக்கையில் பொய்த்தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உதய கம்மன்பில கடிதம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2018 | 8:22 pm

Colombo (News 1st) கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கான ஹன்சார்ட் அறிக்கையில் (Hansard Report) பொய்த்தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்ற ஹன்சார்ட் ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

14 ஆம் திகதிக்குரிய ஹன்சார்ட் அறிக்கையின் திருத்தப்படாத பிரதியில் பாராளுமன்றத்தில் இடம்பெறாத விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் சபாநாயகரால் சபைக்கு அறிவிக்கப்பட்ட தகவல்களுக்கு மேலதிகமாக ஹன்சார்ட் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை அன்றைய நாளுக்குரிய காணொளிகளூடாக உறுதி செய்ய முடியும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹன்சார்ட் ஆசிரியருக்கு அனுப்பியுள்ள கடிதத்துடன் காணொளிகளையும் இணைத்து அனுப்பியுள்ள உதய கம்மன்பில, இது குறித்து தேவையான திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்