புதியஎஞ்சின், பவர்செட் குறித்து ரயில்வே திணைக்களம்

புதிய எஞ்சின், பவர் செட் குறித்து ரயில்வே திணைக்களம்

by Staff Writer 28-11-2018 | 7:56 AM
Colombo (News 1st) அடுத்த சில நாட்களுக்குள் புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் பவர் செட் எனப்படும் சக்தி இயந்திரத் தொகுதி ஆகியன நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக ரயில்லே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் ரயில் எஞ்சின் மற்றும் சக்தி இயந்திரத்தில் முதற்கட்டமாக இவை நாட்டுக்கு கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்கள் ரயில் மார்க்கங்களில் பொருத்தப்பட்டு அதன் முன்னேற்றம் தொடர்பில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே குறித்த இயந்திரத் தொகுதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்தவகையில், 10 எஞ்சின் கட்டமைப்புகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் 6 வலுக்கட்டமைப்புக்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் 90 எஞ்சின்களில் 13 எஞ்சின் இயந்திரங்கள் 60 வருடங்களுக்கும் அதிக காலம் பாவனையில் உள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் 98 சக்தி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.