செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Nov, 2018 | 5:58 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் நேற்று (27) அனுஷ்டிக்கப்பட்டது.

02. மீண்டும் ஏழை, அப்பாவி மக்களின் அரசாங்கத்தை ஸ்தாபித்து, நிவாரணம் வழங்கும் யுகத்தை, அபிவிருத்தி யுகத்தை மீண்டும் உருவாக்குவோம் என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன் என ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

03. உயிர் நீத்தவர்களை நினைவுகூர்வது அவரவர் சார்ந்த சமூகங்களின் கடமை என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

04. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரேரணை ஒன்றைக் கொண்டுவர உத்தேசித்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

05. எரிபொருள் கொண்டு செல்லும் ரயில்கள் மீது சில தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த சாரதிகள் நேற்று முன்தினம் (26) காலையில் இருந்து சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட், 7 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே தான் எடுத்த புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பியுள்ளது.

02. காலநிலை மாற்றம் தொடர்பில் தமது அரசாங்கத்தால் கையளிக்கப்பட்ட அறிக்கையில் நம்பிக்கையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

01. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி 7 ஆம் இடத்திலிருந்து 8 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

02. ஆண்டின் அதிசிறந்த றக்பி வீரருக்கான விருதை, அயர்லாந்தின் ஜொன்னி செக்ஸ்டன் (Johnny Sexton) சுவீகரித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்