சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம்

சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம்

சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2018 | 4:53 pm

Colombo (News 1st) வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைபின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளமையால், முன்னாள் முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக வட பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சினூடாக உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு சி.வி.விக்னே‌ஷ்வரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறினார்.

அமைச்சின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பாதுகாப்பு வழங்கத் தயார் எனவும் வட பிராந்தியத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்