திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 27-11-2018 | 6:55 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. 02. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தினதும் அப்போதைய அரசாங்கத்தின் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவையினதும் தலைவர் என்பதால், கடந்த மூன்றரை வருடங்களாக இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் ஜனாதிபதியும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என ஐ.தே.கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஷிம் சுட்டிக்காட்டியுள்ளார். 03. இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக டொக்டர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். 04. தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 05. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்வதற்காக பிரதம நீதியரசர் நலின் பெரேரா, 7 பேர் கொண்ட முழுமையான நீதியரசர்கள் குழாமை நியமித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. ஈரானின் மேற்குப் பகுதியில் நேற்று இரவு, 6.3 ரிக்டர் அளவில் எற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தகவல் வௌியிட்டுள்ளது. 02. தலைநகர் இஸ்தான்புல்லின் மத்திய பகுதியில் துருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், வீரர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

ஏனைய செய்திகள்