உயிர் நீத்தவர்களை நினைவுகூர்வது சமூகக் கடமை 

உயிர் நீத்தவர்களை நினைவுகூர்வது அவரவர் சார்ந்த சமூகங்களின் கடமை: சி.வி.விக்னேஷ்வரன்

by Staff Writer 27-11-2018 | 5:09 PM
Colombo (News 1st) உயிர் நீத்தவர்களை நினைவுகூர்வது அவரவர் சார்ந்த சமூகங்களின் கடமை என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் புராதன கிரேக்க காலம் முதல் யுத்த காலங்களின் போதும் அதன் பின்னரும் நிகழ்வதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராக தெற்கில் எதிர்ப்பு வெளியிடும் துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளதாக சி.வி.விக்னேஷ்வரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தாய், தந்தை, உயிர் நீத்த உடன் பிறப்புகளை நினைவுகூர்ந்து தேற்றிக்கொள்ளவதனைக் கூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் மனோநிலையை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழ் மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது எனவும் அவ்வாறு எதிர்ப்பவர்கள் மக்கள் மனதில் மேலும் உறுதியையும் சுதந்திர தாகத்தையும் மேலெழச் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்